புதுதில்லி, ஜூன் 14- குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநிலங்களவைக்குழுத் தலைவர் எளமரம் கரீம் பங்கேற்கிறார். இன்று (ஜூன் 15) அன்று நடைபெற வுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு: “நடைபெறவிருக்கும் குடியரசுத் தலை வர் தேர்தலில், குடியரசுத் தலைவரைத் தேர்ந் தெடுப்பது தொடர்பாக நாளை (ஜூன் 15) மாலை 3 மணியளவில் புதுதில்லி கான்ஸ் டிட்யூசன் கிளப்பில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து எனக்குத் தெரிவித்து உங்களின் ஜூன் 11ஆம் தேதி யிட்ட கடிதத்தைப் பெற்றுள்ளேன். பொதுவாக இதுபோன்று நடைபெறும் கூட்டங்களுக்கு முன்னதாகவே இவ்வாறு கலந்துகொள்ளவிரும்பும் கட்சிகளுக்கி டையே பரஸ்பரம் கலந்தாலோசனைகள் செய்துகொள்ளும் ஒரு நடைமுறை எப்போ தும் இருந்து வந்திருக்கிறது. எனினும் இந்த முறை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் தேதி, நேரம், நடைபெறுமிடம் மற்றும் நிகழ்ச்சி நிரலைத் தெரிவிக்கும் தன்னிச்சையான தக வலைப் பெற்றுள்ளோம்.
உங்கள் கடிதம், “எதிர்க்கட்சிகளின் குர லில் பலனளிக்கக்கூடிய சங்கமம் இன்றைய காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிடுகிறது. இது தொடர்பாக பரஸ்பரம் கலந்தாலோ சனை இருந்திருந்தால் மற்றும் இத்தகைய கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் விதத்தில் முன்னதாகவே அவர்களுக்குத் தெரிவித்து அவர்களின் கால அட்டவணை களை மாற்றியமைக்க வழிவகை செய்தி ருந்தால் இதனை மேலும் சிறப்பாகச் செய்தி ருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இக்கடி தம் கிடைக்கப்பெற்றதற்கும், கூட்டம் நடை பெறும் தேதிக்கும் இடையே வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாது காத்திடவும், இந்தியக் குடியரசின் மதச்சார் பற்ற ஜனநாயகக் குணாம்சத்தைப் பாது காத்திடவும், அனைத்து மதச்சார்பற்ற சக்தி களும் விரிவான முறையில் அணிதிரண்டு வலுப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடை விடாது தொடர்ந்து கூறி வந்திருக்கிறது. இத்தகு அடிப்படையில், வரவிருக்கும் குடிய ரசுத் தலைவருக்கான தேர்தல் குறித்து விவா திக்கும் பிரச்சனையும் அமைந்திருப்பதை யும், குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசின் காவலர் என்கிற உண்மையையும் மனதில் நிறுத்தி, இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்கிறது. கட்சி யின் சார்பில் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் எளமரம் கரீம் கலந்து கொள்கி றார். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத் தில் தெரிவித்துள்ளார். (ந.நி.)