புதுதில்லி:
2019-2020 நிதியாண்டுக்கான பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.இந்நிலையில், பட்ஜெட் குறித்து பொதுமக்களும் ஆன்லைனில் கருத்து தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து பொதுமக்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன்படி mygov.in என்ற இணையதளப் பக்கத்தில் ஜூன் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் பட்ஜெட் குறித்த தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்ஜெட் தாக்கலுக்கான ஜனநாயக நடைமுறையில் குடிமக்களும் தங்களது பங்களிப்பைச் செலுத்தலாம். பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை குறித்த தங்களது பரிந்துரைகளை பிடிஎப்-ஆக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மக்களின் கருத்துகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.