india

img

அக்.15, 16இல் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார்

புதுதில்லி, அக். 4 - இந்திய ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெள்ளிக்கிழமையன்று இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் அனுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின், அந்நாட்டுக்கு செல் லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் ஜெய்சங்கர் ஆவார். இலங்கை பய ணத்தைத் தொடர்ந்து, அக். 15, 16இல் பாகிஸ்தானுக்கும் ஜெய்சங்கர் பயணம் மேற் கொள்கிறார். பிரதமர் மோடி க்குப் பதில், ஷாங்காய் ஒத்து ழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் உறுப்பு நாடு களின் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளே பங்கேற் பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.