கும்பகோணம்,ஆக.30- கீழடியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சி யகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லி யல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் மூன்று கட்டங்களாக நடந்த அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்த நிலையில் மொத்தம் 7818 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது ஐந்தாம் கட்ட அகழ்வா ராய்ச்சி பணி நடைபெறுகிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து ள்ளனர். இந்நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களி டம் அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். அருங்காட்சியகம் அமைப்பதற் காக 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.