வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்நிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்கனவே மும்பை பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும். வடமேற்கு, வடக்கு டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா, கஸ்கஞ்ச், பரத்பூர், நாட்பாய், பர்சனா போன்ற பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில், மிதமான கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.