headlines

img

வக்பு திருத்தச் சட்டம்: ஓர் அரசியலமைப்பு நெருக்கடி

வக்பு திருத்தச் சட்டம்:  ஓர் அரசியலமைப்பு நெருக்கடி

வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால நிறுத்தி வைப்பு உத்தரவு, இந்தியாவின் மதச் சார்பின்மை அடிப்படையை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். கடந்த ஏப்ரல் 8 அன்று  அமலுக்கு வந்த இந்த சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவுகளை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப் பித்துள்ளதானது, அரசியலமைப்பின் அடிப் படை கட்டமைப்பை பாதுகாக்கும் நீ

புதிய சட்டம் கொண்டுவந்திருக்கும் 44 திருத் தங்கள், வக்பு நிர்வாகத்தை அடிப்படையிலேயே மாற்றியமைக்கும் முயற்சியாகும். மூன்று முக்கிய பிரச்சனைகள் இந்த சட்டத்தில் உள்ளன; பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டு அடிப்படையில் வக்பாக இருந்து வரும் சொத்துக்களுக்கு ஆவ ணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது  சாத்தியமற்றது. உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி யதுபோல, “ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத் துக்களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை”. ஜும்மா மசூதி போன்ற பழமையா

இரண்டாவது, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பது மிகப் பெரும் ஆக்கிரமிப்பாகும். இந்து அறநிலையங்களில் இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக இருக்கும் போது, வக்பு வாரியங்களில் மட்டும் இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?

ன்றாவது, வக்பு சொத்துக்களின் தன்மை யை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்குவது, மத நிறுவனங்களின் சுயாட்சியை முற்றிலும் பறிக்கும் செயலாகும்.

பாஜக அரசு, பல்வேறு முஸ்லிம் அமைப்பு கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்பு களின் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் நடக்கும் ஆவேசப் போராட்டங்களின் ஒரு பகு தியாக, தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 

கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த சட்டத்தை எதிர்த்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. வக்பு சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம்  தொடுத்த வழக்கு இந்த சட்டரீதியான போராட்டத் தின் முக்கிய அங்கமாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு இடைக்கால நிவாரணம் அளித்தாலும், இந்த சட்டத்தை முழு மையாக திரும்பப் பெற வேண்டும். அரசியலமைப் பின் மீதான இந்த தாக்குதலுக்கு எதிராக, சட்டரீதி யான போராட்டங்களுடன், மக்கள் போராட்டங்க ளும் தொடர்ந்து நடைபெற வேண்டியது அவசிய மாகும். வக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத் தும் போராட்டங்கள், மதச்சார்பின்மை மற்றும் பன் முகத்தன்மையை பாதுகாக்க அனைத்து சமூக, அரசியல் சக்திகளுக்கும் வழிகாட்டியாகும்.