ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கம் வாங்கி தந்த நீரஜ் சோப்ரா, உலக தடகள வீரர்களின் பட்டியலில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர், நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி 2வது இடத்துக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.