india

img

மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில், மகா கும்பமேளா குறித்த பெருமிதத்துடன் பிரதமர் மோடி பேசியபோது, அங்கு கூட்ட நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்தது குறித்து ஏன் பேசவில்லை, அதற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை; கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை என்ன என எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து இன்று நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.