சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற புள்ளிவிபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2024ஆம் ஆண்டில் தேசிய சைபர் கிரைம் குற்ற ஆவண காப்பகத்தில் பதிவாகியிருந்த குற்றங்கள் 6,079 ஆக அதிகரித்துள்ளது. இதுவே 2023ஆம் ஆண்டு 2,957 குற்றங்கள் பதிவாகியிருந்தது. இதன் மூலம், சிறார் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றும் குற்றங்கள் ஒரே ஆண்டில், பன்மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.