india

img

நீதிபதிகள் மத நம்பிக்கைகளை பகிரங்கப்படுத்தக் கூடாது ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கண்டனம்

புதுதில்லி கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடை பெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிரதமர் உடன் மதம் சார்ந்த நிகழ்வில் பங்கேற்றதற்கு “இந்தியா”  கூட்டணிக் கட்சிகள் உட்பட நாடு முழுவதும் கடும் கண்டனக் குரல் கிளம்பியது.

இந்நிலையில்,”உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கை கள் தொடர்பான விஷயங்களை பொது வெளியில் பகிரங்கப் படுத்தக் கூடாது” என ஓய்வுபெற்ற  உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா  கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டம் சார்ந்த ஊடக மான பார் அண்ட் பெஞ்சிற்கு அவர் அளித்த பேட்டியில்,”நீதிபதிகளின் மத நம்பிக்கைகள் தனிப்பட்ட விஷயம் ஆகும். அதை தொழில் வாழ்க்கையுடன் குழப்ப வேண்டாம். நம்பிக்கையும், ஆன்மீகமும் மதத்திலிருந்து மிகவும் வேறு பட்டவை. அவற்றுக்கிடையே தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். நீதித்துறையில் அங்கம் வகிப்பவர்கள் மதம், மனிதாபிமானம், அரசியலமைப்பு ஆகியவற்றில் புரிதல் பெற்றிருக்க வேண்டும். மேலும் நீதி என்பது இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயக குடி யரசு என்ற பொது விவகாரங்கள் உட்பட பல்வேறு நிலைகளில் நடைபெற வேண்டும். நீதிபதியின் தனிப்பட்ட நலன்கள் நீதி நிர்வா கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடாது. இது நீதி நிர்வாகத்தின் ஒரு பகுதி” என ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி ஹிமா கோலி அறி வுறுத்தியுள்ளார்.