india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேகாலயா மாநிலத்தின் மத்தியப் பகுதியில் வியாழனன்று மாலை 4.07 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4-ஆக பதிவாகிய நிலையில், கட்டிடங்கள் லேசான அளவில் குலுங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

“மலையாள சினிமாவில் 20க்கும் மேற்பட்ட நடிகைகள் மிக மோசமான அளவில் பாலியல் கொடுமைகளை அனுபவித்து உள்ளனர்” என நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மது விலை குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் ரூ.120க்கு விற்கப்பட்ட மதுபாட்டில்களை ரூ.99க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லாரி மோதியதில் ஆட்டோவில் சென்ற 7 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் புதனன்று 7 மாவட்டங் ்களில் உள்ள 24 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 61% அதிகமான வாக்கு கள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தில்லியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப் பட்டுள்ள அதிஷி செப். 21 அன்று பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்று வரும் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட  2ஆவது சுற்று பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

பாஜக எம்.பி., கங்கனா ரணாவத் நடித் துள்ள “எமர்ஜென்சி” திரைப்படத்தை அனு மதிப்பது தொடர்பாக செப்.25-க்குள் முடிவெடுக்க திரைப்பட தணிக்கை மறு ஆய்வு குழுவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புராவில் ஆழ்த் துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மூலம் உயிருடன் மீட்கப்பட்டது.

சண்டிகர்

ஹரியானா சட்டமன்ற தேர்தல்
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை ஜெராக்ஸ் எடுத்த பாஜக

ஹரியானாவில் அக்டோபர் மாதம் 5 அன்று ஒரே கட்ட மாக சட்டமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹரியானா சட்ட மன்ற தேர்தலில் பெண்களுக்கு மாதம் ரூ.2,000, முதியோர் உதவித்தொகையாக ரூ. 6,000, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்துடன் 25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு என 7 வாக்குறுதிகளை புதனன்று காங்கி ரஸ் கட்சி வெளியிட்டது.

கூடுதலாக ரூ.100...  

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி களை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையாக பாஜக வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில்,”பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை, அந்தி யோதயா திட்டத்தின் கீழ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூ.500 உதவித்தொகை, ஹரியானாவில் வசிக்கும் அக்னி வீரர்க ளுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்தார். 

இதில் பாஜக அறிவித்துள்ள பெண்க ளுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை தொடர்பான வாக்குறுதி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை காப்பி அடித் தும், காங்கிரஸ் கட்சியை விட ரூ.100 சேர்த்து கொடுத்து வாக்கு கேட்பதும்  போல உள்ள நிலையில், பாஜகவின் இந்த செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ

உ.பி. காவல்நிலையத்தில் தலித் சிறுவன்  அடித்துக் கொலை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் ஹேரி மாவட்டத் தின் சிஸவான் காலா கிரா மத்தை சேர்ந்த 16 வயது தலித் சிறுவ னுக்கு திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு  இருப்பதாக கூறி, கடந்த செப்., 3 அன்று  போலீசார் கைது செய்தனர். பின்னர்  அந்த சிறுவனை போலீசார் கடுமை யாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப் படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக் கப்பட்ட சிறுவன், மாநில தலைநகர் லக் னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தலித் சிறுவன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தான். சிறு வன் இறந்த செய்தியை அறிந்ததும் அக் கிராம மக்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, ஹேரி  தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.