india

img

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ ஒன்றுபட்டு முறியடிப்போம்!

புதுதில்லி, செப். 19 - மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாய கம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சி யும் ஒன்றுபட்டு எதிர்த்து முறியடிக்க முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்ப தாவது:

நாடாளுமன்றம், சட்டமன்றப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஒன்றிய அமைச்ச ரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டால், அது  நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையையும், கூட்டாட்சி அமைப்பு முறையையும் அரித்து வீழ்த்திடும்.

மக்களவைக்கான தேர்தலுடன் நடத்த வேண்டும் என்பதற்காக சில  சட்டமன்றங்களின் ஆயுளைக் குறைக்கும் விதத்தில் இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன. மேலும், ஒரு மாநில அரசு கவிழ்ந்து, சட்ட மன்றம் கலைக்கப்படும் பட்சத்தில், இடைக்காலத் தேர்தல் நடத்தப்படும்; இந்த தேர்தல் சட்டமன்றத்தின் மீத முள்ள காலத்திற்கு மட்டுமேயாகும் என்பவை அனைத்தும் அரசியல மைப்புச் சட்டத்தின்படி ஐந்தாண்டு காலத்திற்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை மீறுகின்றன.

இடைக்காலத் தேர்தலால் அடிபடும் நோக்கம்!

மேலும் எஞ்சியிருக்கும் காலத்திற்கு மட்டும் பேரவைக்கு இடைக்காலத் தேர்தலை நடத்த வேண்டும் என்கிற பரிந்துரை, ‘ஒரே  நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டு வரப்படுவதன் நோக்கத்தையே சிதைத்து விடுகிறது. இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர், குறுகிய காலத்திலேயே மீண்டும் ஒரு தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.

அனைத்துப் பஞ்சாயத்து களுக்கும், நகர்மன்ற அமைப்பு களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறி யிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நயவஞ்சகமான முறையில்  தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலே யாகும். உள்ளாட்சி அமைப்புகளின் முடிவெடுக்கும் அதிகாரங்களைக்கூட ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளும் அதீத நடவடிக்கையாகும் இது.

மேலும் பறிபோகும் மாநில உரிமைகள்!

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்கள் நடத்துவது என்பது அந்தந்த மாநில அரசுகளின் நோக்கத்திற்கு உட்பட்டவையாகும். அதனையும் கூட ஒன்றிய அரசாங்கம் பறித்துக்கொள்ளும் விதத்தில் இந்த முடிவினை எடுத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாறுபட்ட நிலை மைகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தோமானால் இது ஓர் அபத்த மான முடிவு என்பது தெரியவரும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்னும் கருத்தாக்கம் ஆர்எஸ்எஸ் - பாஜக வகையறாக்களின் சிந்தனையில் உருவானது. இது ஒரே தலைவரின் கீழ் ஒரு மையப்படுத்தப்பட்ட ஒற்றை யாட்சி அரசையே உருவாக்க விரும்பு கிறது.

இந்த நோக்கத்திற்காக அரசியலமைப்பைத் திருத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக எதிர்க்கும்.

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கக் கூடிய ஒவ்வொரு கட்சியும், ஒன்றுபட்டு நின்று, இந்தக் கேடுகெட்ட நடவடிக்கையை எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு தமது அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)

அதிபர் ஆட்சியை நோக்கி நாட்டை நகர்த்தத் திட்டம்:  தமிழ்நாடு, கேரளம், கர்நாடக முதல்வர்கள் எதிர்ப்பு

“ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்கும், நாட்டை எதேச்சதிகார அதிபர் ஆட்சி  முறையை நோக்கி கொண்டு செல்லும்”  என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பினராயி விஜயன் 

“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடியதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அனைத்து மாநில அதிகாரங்களையும் பறித்து, ஒன்றிய அரசிடம் குவிக்கவே இந்த திட்டம் வகை செய்யும். இது மக்களவைத் தேர்தலிலிருந்து பாஜக பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்ப தையே காட்டுகிறது. ஒரே நாடு, ஒரே  தேர்தல் திட்டமானது இந்த ஆட்சிக்காலம் முடிவதற்குள் அமல்படுத்தப்படும் என அமித் ஷா கூறிய அடுத்த தினமே இத்திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கிறது. இந்தி யாவின் அனைத்து மாநிலங்களும், தனித்துவமான சுற்றுச்சூழலையும் பின்புலத்தையும் கொண்டவை. ஆனால், இந்தியாவின் தேர்தல் அரசி யலை அதிபர் ஆட்சி முறையை நோக்கி நகர்த்துவதற்கு சங்பரிவாரங்கள் ஒரு ரகசிய முயற்சியை மேற்கொள் கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல்  திட்டத்தை அனைத்து மாநிலங்களி லும் அமல்படுத்தினால் அது கட்டாய மான முறையில் ஒன்றிய அரசின் ஆட்சி யையே ஏற்படுத்தும் அல்லது மக்க ளின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். இறுதியில் ஜனநாய கத்தை அழித்துவிடும்” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

“இந்தியாவின் கூட்டாட்சி அமைப் பை சீர்குலைக்கக் கூடியது இந்த  திட்டம். இந்திய தேர்தல் நடைமுறை கள், மாநில பிரச்சனைகள், நிர்வாக முன்னுரிமைகள் வேறுபாடானவை. ஆகையால் நடைமுறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது சாத்தி யமே இல்லாதது. ஆட்சி நிர்வாக நடை முறைகளை நாசமாக்கக் கூடியது  இது. பாஜக தமது சுய கவுரவத்துக் காக இத்தகைய ஒரே நாடு ஒரே  திட்டத்தை கொண்டுவர முயற்சிக்  கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத் தை ஒருபோதும் செயல்படுத்தவே முடி யாது. இந்திய ஜனநாயகத்தை ஒரே  ஒரு கட்சியின் சுயநலத்துக்கும் பேரா சைக்கும் வளைத்துவிட்டுப் போகவும் முடியாது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு சமமான பகிர்வுகளை வழங்குதல் ஆகிய பிரச்சனைகள் ஒன்றிய அரசு முன்னிருக்கும் முதன்மையானவை. இதில் கவனம் செலுத்தாமல் இவற்றைத் திசைத்திருப்பும் வகையில் தமது சக்தியை ஒன்றிய பாஜக அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது” என்று  திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரு மான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதேபோல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், மஜ்லிஸ் கட்சித்  தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தங்களின் எதிர்ப்பைத்  தெரிவித்துள்ளனர்.