world

img

இஸ்ரேல் செய்தது போர்க்குற்றம்- ஹிஸ்புல்லா தலைவர் கொந்தளிப்பு

லெபனானில் பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்த சம்பவத்தையடுத்து, சட்டங்களுக்கு அப்பால் சென்று இஸ்ரேல் போர்க்குற்றம் செய்துள்ளது என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா எதிர்வினையாற்றியுள்ளார்.

இதுகுறித்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கூறுகையில், லெபனான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் உள்ளோம்.இது மாதிரியான தாக்குதலை உலகம் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தாக்குதல் அனைத்து எல்லைகளையும் அத்துமீறி நடந்துள்ளது.

இஸ்ரேல் அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று, எதையும் பொருட்படுத்தாமல் செய்த போர்க்குற்றம் இது. இந்தப் படுகொலை சம்பவம் லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல் என பேசினார். இந்தப் பேச்சு லெபனான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளது. ஆனால் அவர் எங்கிருந்து பேசினார் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

மின்னணு தொழில்நுட்ப சாதனங்கள் வழியே நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, லெபனானில் போன் போன்ற மின்னணு சாதகங்களை பயன்படுத்த மக்கள் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.