புதுதில்லி:
அரசின் கடன் திட்டங்கள், கிராமப்புறங்களை போதிய அளவிற்கு சென்று சேருவதில்லை என்று, ‘கோன்கனெக்ஷன்’ நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் விவசாயிகள் சந்திக் கும் பிரச்சனைகள் மற்றும் கிராமப்புற மக்கள் சந்திக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள் குறித்து, ‘கோன் கனெக்ஷன்’ நிறுவனம் ஆய்வுஒன்றை அண்மையில் நடத்தியுள்ளது.அதில், இந்தியாவில் 43.6 சதவிகித விவசாயிகள் தங்களது விளைபொருளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை எனவும், சராசரியாக ஐந்தில்ஒரு விவசாயி தங்களுக்குப் பருவநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சனைஎன்று கருதுவதாகவும் தெரியவந்துள்ளது.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேளாண் உபகரணங்களுக்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதேபோல, கிராமப்புறங்களைச் சேர்ந்த 60 சதவிகித மக்கள், தங்களுக்குக் கடன் திட்டங்கள் சரியாக வந்துசேர்வதில்லை என்று கூறியுள்ளனர். ரூ. 50 ஆயிரம் வரையிலான கடன்கள் 25 சதவிகித விவசாயிகளுக்கும், ரூ. 5 லட்சம் வரையிலான கடன்கள் 15 சதவிகித விவசாயிகளுக்கும் மட்டுமே கிடைப்பதாக கூறியுள்ளனர்.
48 சதவிகித குடும்பங்கள் அடுத்த தலைமுறையில் விவசாயப் பணியில் ஈடுபட போவதில்லை என்றும் அதிர்ச்சிஅளித்துள்ளனர்.உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப்,
மேற்குவங்கம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 19 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேரிடம் ‘கோன் கனெக்ஷன்’ நிறுவனம் தனது ஆய்வை நடத்தியுள்ளது.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், மேற் கண்ட விஷயங்களில் மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ‘கோன் கனெக்ஷன்’ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.