அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அரியானா, அசாம், பஞ்சாப், பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
அசாம் மற்றும் பீகாரில் ஆகிய மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 14 பேரும், மிசோரம் மாநிலத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.