india

img

தில்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

புதுதில்லி,அக்.02- போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 2000 கோடி மதிப்புள்ள 560 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.
தில்லி கடந்த சில வாரங்களாகப் போதைப்பொருள் ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது இதில் கடந்த ஞாயிறு அன்று தனித்தனியாக 600 கிராம் அளவிலான போதைபொருளும், ரூ.24.9 கோடி மதிப்பிலான 1.6 கிலோ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சோதனையில் சுமார் 2000 கோடி மதிப்புள்ள 560 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.