புதுதில்லி,மார்ச்.20- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து குறைக்காதே குறைக்காதே தொகுதியைக் குறைக்காதே என முழக்கமிட்டபடி 2ஆவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது