புதுதில்லி, செப். 16 - தொழிலாளர் உரிமைக்காகவும், தொழிற்சங்க உரிமைக்காகவும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலை யில், அவர்களை தமிழக காவல்துறை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்ப தற்கு சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் கண்டனம் தெ ரிவித்துள்ளார்.
மாநிலக் காவல்துறையின் சட்டவிரோத தடுப்புக் காவல்
இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக் கையில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும் புதூர் ஆலையில் வேலைநிறுத்தம் செய்யும் சாம்சங் தொழிலாளர்களுக்கு உறுதியான ஒற்றுமையை வெளிப் படுத்துகிறது. மேலும் சிஐடியு தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்ட வேலைநிறுத்த தொழிலாளர்களை மாநில காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டிக்கிறது.
சாம்சங் தொழிலாளர்களுக்கு, ‘சங்கம் அமைக்கும் உரிமை’ மற்றும் ‘கூட்டுப் பேரம் பேசும் உரிமை’ உள்ளிட்ட நாட்டின் சட்டங்கள் வழங்கி யுள்ள உரிமைகளை உறுதி செய்ய தமி ழக முதலமைச்சர், உடனடியாக தலை யிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்து கிறது.
சர்வதேச- இந்திய சட்டங்களை மீறும் ‘சாம்சங்’ நிறுவனம்
சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையின் மொத்தத் தொழிலாளர்கள் 1723 பேர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர், திங்களன்று 8-ஆவது நாளாக தங்களது வேலைநிறுத்தத்தைத் தொட ர்ந்து வருகின்றனர். சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் பேசும் உரிமை மற்றும் பெரும்பான்மை சங்கத்து டன் நிர்வாகம் பயனுள்ள பேச்சு வார்த்தையை தொடங்குவது ஆகி யவை அவர்களின் கோரிக்கை களாகும். உலகளவில் அவப்பெயர் பெற்ற சாம்சங் நிர்வாகம் தனது புகழ்பெற்ற சங்கம் இல்லா கொள்கை யுடன் தொழிலாளர்களின் இந்த ஜன நாயக உரிமைகளை அடக்க முயல்கிறது. மேலும் தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்சங்க தகராறு சட்டம் 1947 மற்றும் ஐஎல்ஓ (ILO) தீர்மானங் கள் 87, 98 மற்றும் சர்வதேச தொழி லாளர் தரநிலைகள் (ILS) ஆகிய வற்றின் மூலம் வழங்கப்பட்ட உரிமை களை வெளிப்படையாக மீறுகிறது.
உழைப்பைச் சுரண்டி கொள்ளை லாபம்
வீட்டு உபயோக சாதனங்களை உற்பத்தி செய்யும் சாம்சங் ஸ்ரீபெரும் புதூர் ஆலை மட்டுமே இந்திய மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப் படும்- 12 பில்லியன் டாலர் ஆண்டு வரு வாயில் மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப் பாக உள்ளது. இந்த ஆலையில் உள்ள தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரம், குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் அல்லது தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ஒவ்வொரு பொருளையும் 10-15 வினாடிகளுக்குள் முடிக்க வேண்டிய கொடூரமான வேலை அழுத்தம், 4-5 மணி நேரம் தொடர்ந்து ஓய்வின்றி வேலை செய்தல் மற்றும் பாதுகாப்பற்ற பணிச் சூழல் ஆகியவற்றுக்கு ஆளாகின்ற னர். சியோலில் உள்ள சாம்சங் தொழி லாளர்கள் சராசரியாக ரூ. 4.5-6.0 லட்சம் ஊதியமாகப் பெறுவதற்கு மாறாக, இந்திய தொழிலாளர்கள் மாதம் ரூ. 20,000-25,000 என்ற அற்ப ஊதி யத்தில் பணிபுரிகின்றனர். குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், சாம்சங் குளோபல் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 9.84 டிரில்லியன் KRW (தென் கொரிய வோன்) நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 1.72 டிரில்லியன் KRW ஆக இருந்தது.
தொழிலாளர்களை மிரட்டி துன்புறுத்தும் காவல்துறை
பெரும்பான்மை சங்கத்துடன் விவா தித்து பிரச்சனைகளைத் தீர்க்க சாம்சங் நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திங்கள்கிழமை (செப். 16) அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணி நடத்த திட்டமிட்டனர். ஆனால், சங்கத் தலைவர் இ. முத்துக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் அதிகாலையிலேயே சங்க அலுவலகத்தில் இருந்து 104 வேலைநிறுத்த தொழிலாளர்களுடன் சேர்த்து சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சாம்சங் தொழிலாளர்கள் நகருக்குள் நுழைவதையே காவல்துறை தடுத்தது. அமைதியாக போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் தங்களது போராட்ட இடத்தில் காவல்துறையால் அச்சுறுத்தப் பட்டுள்ளனர் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும்!
தங்களது சட்டப்பூர்வமான ஜனநா யக உரிமையை வலியுறுத்தும் போராட் டக்கார தொழிலாளர்கள் மீது மாவட்ட காவல்துறை அதிகாரத்துடன் நடந்து கொண்டதையும், சொந்த தொழி லாளர்களுக்கு எதிராக சாம்சங் நிர்வா கம் பழிவாங்கும் விதமாக காவல்துறை யை தூண்டிவிட்டதையும் சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. எந்த வொரு பன்னாட்டு வெளிநாட்டு நிறு வனமும் நமது நாட்டில் நிலவும் நாட்டின் சட்டங்களை சிதைக்க அனுமதிக்கப் படக் கூடாது. எனவே, தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்கவும், தொழி லாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வும் தமிழக முதலமைச்சர் மற்றும் தகுந்த அதிகாரிகள் உடனடியாக தலை யிட வேண்டும் என சிஐடியுகோருகிறது.
நாடு முழுவதும் ஆதரவுப் போராட்டம்!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதர வாகவும் ஒற்றுமையாகவும், செப்டம்பர் 16, 17 தேதிகளில் நுழைவாயில்/பணி யிட அளவிலான கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு சிஐடியு தனது அனைத்து அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறது.
இந்திய தொழிலாளர்களை பன்னாட்டு நிறுவனங்களின் அடிமை களாக மாற்றாதீர்கள் - உரிமைகளை யும் சட்டங்களையும் நிலைநிறுத்துங் கள். இவ்வாறு தபன் சென் வலியுறுத்தி யுள்ளார்.