india

img

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 87.98% தேர்ச்சி

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 1,621,224 மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இந்த நிலையில், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 1,426,420 (87.98%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 91.52% பேரும், மாணவர்கள் 85.12% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.67% அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விஜயவாடா மண்டலத்தில் 99.04% பேரும், சென்னை மண்டலத்தில் 98.47% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.