சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல். எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், கடைசியாக 2011-ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீகார் தேர்தலையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.