இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமான பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி பொறுப்பேற்றார்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் 'ஏர்விங்' பிரிவில் 50 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் விமான பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரியுடன் 4 ஆண் அதிகாரிகளுக்கு விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் தல்ஜித் சிங் வழங்கினார். பாவ்னா சவுத்ரி உட்பட ஐந்து பேர், ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இவர் பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு விமானங்களை இயக்கி பயிற்சி பெற்றுள்ளார்.