கேரளத்தின் கல்லூரி வளாகங்களில் ஒற்றைக் குரலாக ஒலிக்கும் எஸ்எப்ஐ
கல்லூரிகள் 497இல் 372 ; பள்ளிகள் 675இல் 589 வெற்றி
திருவனந்தபுரம் “படிப்பு என்பது நடுநிலைமையின் மௌனம் அல்ல, நிலைப்பாடுகளின் போ ராட்டம்” என்று கேரள வளாகங்கள் உரத்த குரலில் முழக்கமிட்டன. அந்த முழக்கத்தில் இந்திய மாணவர் சங்கம் கடல் அலைகள் போல எழுந்தது. கேரளாவில் பள்ளிகளில் பள்ளி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். கண்ணூர், கோழிக்கோடு, எம்ஜி, சமஸ்கிருதம், கேரள பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் பள்ளிகளின் மாண வர் நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான் மையான இடங்களை வென்று வாகை சூடி யுள்ளது இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ). வகுப்பு வாத சக்திகளுடன் கூட்டணி வைத்து, இரத்தம் குடிக்க ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்க ளைத் தோற்கடித்து மாணவர்கள் எஸ்எப்ஐ-யைப் பெருமைப்படுத்தினர். கேரளத்தில் தேர்தல்கள் நடைபெற்ற 497 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 372 இடங்களை எஸ்எப்ஐ வென்றது. கேரள பல்கலைக்கழகத்தில் 75க்கு 65, மகாத்மா காந்தி பல்கலையில் 123 கல்லூரிகளில் 103, கண்ணூரில் 77க்கு 60, கோழிக்கோடு 202க்கு 127, சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 20க்கு 17 என எஸ்எப்ஐ அபார வெற்றி பெற்றது. பள்ளி நாடாளுமன்றத் தேர்தல் இதோடு, அமைப்பு ரீதியாக நடை பெற்ற 675 பள்ளி நாடாளுமன்றத் தேர்தல்களில் எஸ்எப்ஐ 589 பள்ளிகளில் வெற்றிக்கொடி நாட்டி யது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியலையும், வளாகத்தின் கோரிக்கைகளையும் தெளிவாகக் கூறி தேர்தலை எதிர்கொண்டது இந்திய மாண வர் சங்கம். அதன்மூலம் யூடிஎஸ்எப், எம்எஸ்எப், கேஎஸ்யூ மற்றும் ஏபிவிபி ஆகியவற்றின் கோட்டைகளை தகர்த்தது எஸ்எப்ஐ. கடந்த பத்து ஆண்டுகளாக அரசியலற்ற தன்மை பொங்கி எழுந்த வளாகங்களை இந்திய மாண வர் சங்கம் கைப்பற்றியது. கேரள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 75 கல்லூரிகளில் 65 கல்லூரிகள் எஸ்எப்ஐ உடன் நிலைகொண்டன. 45 கல்லூரிகளில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எஸ்எப்ஐ வென்றது. கேஎஸ்யூவிடம் இருந்து ஆறு கல்லூரிகளும், ஏபிவிபி மற்றும் ஏஐஎஸ்எப் ஆகியவற்றிடமி ருந்து தலா ஒரு கல்லூரியையும் எஸ்எப்ஐ வென்றது. ஊடகங்களின் ஆரவாரம் இல்லா மல், வகுப்புவாத கூட்டணிகள் இல்லாமல் தனி யாக பெற்ற வரலாற்று வெற்றி இது. மாநில பல் கலைக்கழகங்களில் இந்திய மாணவர் சங்கத்தை தடுத்து நிறுத்த அழைப்பு விடுத்த சங் பரிவாரின் குரலாக விளங்கிய தற்காலிக துணைவேந்தர்களை வாயடைக்கச் செய்துள் ளது இந்த வெற்றி. காலடி சமஸ்கிருத பல்கலை காலடியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக் கழக வளாக மாணவர் சங்க தேர்தலில் எஸ்எப்ஐ அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 20 இடங்களில் 17 இடங்களை எஸ்எப்ஐ வென்றது. காலடி பிரதான மையத்திலும், திரு வனந்தபுரம், பன்மனா, ஏற்றுமானூர், திரூர், கொயிலாண்டி மற்றும் பையனூர் ஆகிய மண்டல மையங்களிலும் தேர்தல்கள் நடை பெற்றன. காலடி முதன்மை மையத்தில் எஸ்எப்ஐ 11 பொது இடங்களை வென்றது. பல மண்டல மையங்களில் எஸ்எப்ஐ போட்டி யின்றி வெற்றி பெற்றது. கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) மாணவர் சங்கத்திற்கான தேர்தல்கள் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் முதன்மை மையத்திலும் மூன்று துணை மையங்களிலும் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. மதச்சார்பின்மை வளாகங்கள் கண்ணூர், கோழிக்கோடு, கேரளா, மகாத்மா காந்தி மற்றும் காலடி பல்கலைக்கழகங்களில் நடந்த கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்க ளுக்குப் பிறகு, எஸ்எப்ஐ மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. கேஎஸ்யூ, எம்எஸ்எப் மற்றும் ஏபிவிபி அமைப்புகளைத் தனியாகவும் கூட்டு நடவடிக்கைகளையும் எதிர்ப்பதன் மூலம் அவர்களின் ஏகபோகத்து க்கு சவாலாக அமைந்தது எஸ்எப்ஐ. கேரள வளாகங்களில் இந்திய மாணவர் சங்கத்தை தனியாகவும் ஒரு முன்னணியாகவும் எதிர் கொள்ள முடியாது என்பதால் யூடிஎஸ்எப், ஏபிவிபி, எஸ்ஐஓ போன்ற குழுக்களை ஒன்றி ணைத்து ஒரு புதிய முன்னணியை உரு வாக்கியது. இந்த சோதனை முதலில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்டது. பின்னர், இந்த வகுப்புவாத கூட்டணி வேறு சில வளாகங்களுக்கும் கொண்டு வரப் பட்டது. ஊடகங்கள் இத்தகைய ஆபத்தான நட வடிக்கைகளை இந்திய மாணவர் சங்கத்தின் வன்முறை அரசியலுக்கு எதிரான பரந்த முன்னணி என்ற முத்திரையுடன் மூடி மறைத்தன. ஆனால் கேரளாவில் உள்ள பெரும் பாலான வளாகங்கள் அத்தகைய சக்திகளை புறந்தள்ளின. இது இந்த முறை நடைபெற்ற கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்களில் பிரதி பலித்தது. கேஎஸ்யூ பிறந்த ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் கூட அந்த அமைப் பால் நுழைய முடியவில்லை. கேரள கல்வி வளாகங்களில் வகுப்புவா தத்திற்கு எதிரான காற்று வீசுகிறது. எஸ்எப்ஐ-க்கு கிடைத்த மகத்தான வெற்றியின் மூலம், மதச்சார்பற்ற கேரளா எந்த வகுப்புவாத-தீவிரவாத சக்திகளுக்கும் இடமளிக்காது என்று புதிய தலைமுறை உறுதியாக அறிவித்துள் ளது. கல்வி வளாகங்கள் வழியாக கேரளாவில் காலூன்ற சங் பரிவார் சக்திகள் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் ரகசிய முயற்சியை மாணவர்கள் முறியடித்துள்ளனர். இந்த ஜனநாயக விரோத சக்திகளின் தோள்களில் ஏறி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் கட்டுப் பாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற எம்எஸ்யூ, கேஎஸ்யூ மற்றும் ஏபிவிபி கூட்டணியின் விருப்பமும் சாம்பலாகிவிட்டது. இந்தத் தேர்தல் முடிவுகள் தற்போதைய காலகட்டத்தில் நாட்டிற்கு அளிக்கும் செய்தி மிகப்பெரியது.