states

img

ஆர்ஜேடி தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காமல் தடுக்க  சிபிஐ மூலம் பாஜக சதி

ஆர்ஜேடி தலைவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காமல் தடுக்க  சிபிஐ மூலம் பாஜக சதி?

ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சியின் நிறு வனரும், பீகார் முன்னாள் முதல மைச்சருமான லாலு பிரசாத் 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த போது, ஐஆர்சிடிசி ஹோட்டல்களின் பராமரிப்பு ஒப்பந்தங்களை வழங்கு வதில் ஊழல் நடந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.  இந்த வழக்கை தில்லி ரோஸ் அவென்யு சிறப்பு நீதிமன்றம் திங்க ளன்று விசாரித்தது. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி (முன்னாள் முதலமைச்சர் - பீகார்), அவரது மகன் தேஜஸ்வி (ஆர்ஜேடி தலைவர் - பீகார் எதிர்க்கட்சித் தலைவர்) நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருதரப்பு வாதத்திற்கு பின்பு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே,”லாலு பிரசாத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தினார். டெண்டர் செயல்முறை யைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து சதித் திட்டத்தில் ஈடுபட்டார். நிலத்தின் மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்டு, ராப்ரி தேவி, லாலு பிரசாத் ஆகி யோருக்கு வழங்கப்பட்டது. இது பொ துக் கருவூலத்திற்கு இழப்பை ஏற் படுத்தியது” எனக் கூறினார். லாலு பிர சாத்திடம் குற்றச்சாட்டுகள் வாசிக்கப் பட்டபோது, நீதிபதி,”நீங்கள் சதியில் ஈடுபட்டீர்கள். அரசு ஊழியராக உங்கள்  பதவியைத் தவறாகப் பயன்படுத்தி னீர்கள், டெண்டரில் செல்வாக்கு செலுத் திக் கையாண்டீர்கள், குறைந்த விலை க்கு நிலத்தைப் பெற சதி செய்தீர்கள்” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த லாலு பிரசாத்,ராப்ரி தேவி, தேஜஸ்வி ஆகிய மூவரும், தாங்கள் குற்றம் செய்யவில்லை (Pleaded Not Guilty) என்று நீதிமன்றத்தில் மறுத்தனர். இந்த வழக்கில் அக்டோபர் மாத இறுதி யில் இருந்து தினசரி விசாரணை தொடங்க வாய்ப்புள்ளது. சதி? லாலு குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி மே 2022இல் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) எப்ஐஆர் பதிவு செய்தது. தொடர்ந்து சிபிஐ 2025 ஜூன் 4 அன்று நீதிமன்றத்தில் எப்ஐஆரை சமர்ப்பித்தது. பீகார் சட்டமன்ற தேர்த லுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், ஆர்ஜேடி கட்சியின் முக்கியத் தலைவர்க ளான லாலு குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து தினசரி விசாரணைக்கு தில்லி நீதிமன்றம் உத்த ரவைப் பிறப்பித்துள்ளது. இது சிபிஐ அளித்த கோரிக்கை மூலம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. லாலு குடும்பத்தினரை சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க  முடியாதபடி நெருக்கடி அளிக்க சிபிஐ மூலம் பாஜக சதி திட்டத்தை தொடங்கி யுள்ளதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.