states

img

மம்தா பானர்ஜிக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி கண்டனம்

மம்தா பானர்ஜிக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் சோபா பூரில் உள்ள தனியார் மருத்து வக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பு பயின்று வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி (வயது 23) வெள்ளிக்கிழமை அன்று இரவு 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகை யில்,“கல்லூரி மாணவிகள் இரவில் வெளியே செல்வதை தவிர்க்க வேண் டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஒரு பெண் முதலமைச்சரான மம்தா  பானர்ஜியின் இந்த அடாவடி கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில்,”பெண்கள் இரவில் வெளியே செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொள்வதன் மூலம், கொல்கத்தா மிகவும் பாது காப்பான நகரம் அல்லது துர்காபூர் ஒரு பாதுகாப்பான நகரம் என்ற பிரச்சாரம் உண்மையல்ல என்பதை அவர்  தெளிவு படுத்தியுள்ளார். மேலும் பெண்களுக்கு மேற்கு வங்க மாநிலம் இனி பாது காப்பாக இருக்காது என்பதை அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் குற்றவாளிகள் பாதுகாப் பாக உள்ளனர். பெண்கள் அல்ல” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.