india

img

நாடாளுமன்ற இரு அவைகளும் 3ஆவது நாளாக முடக்கம்!

அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில், தொடர்ந்து 3-ஆவது நாளான இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிகால் கூட்டத்தொடர் தொடங்கியது. டிசம்பர் 20-ஆம் தேதி வரை குளிகால் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் "ஒரே நாடு ஒரே தேர்தல்", வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், சம்பல் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடந்த 3 நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு நாட்களும், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, 3 ஆவது நாளான இன்று, அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.