india

img

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

புதுதில்லி,நவம்பர்.28- வக்பு மசோதா குறித்து பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா 2024 என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதாவைக் கடந்த மக்களவை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.  
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை பரிசீலனைக்கு அனுப்புவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலத்தொடரின் முதல் வாரத்தின் இறுதிநாளில் அறிக்கை அளிக்குமாறு குழுவுக்குக் கூறப்பட்டிருந்த நிலையில் கூட்டுக்குழுவின் காலத்தை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனால் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா பரிசீலனை  கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.