சென்னை, நவ.28- ரூ.6 ஆயிரம் கோடி முறைகேட்டில் ஈடுபட்டு அமெரிக்காவில் கையும் களவு மாக சிக்கியிருக்கும் போதுகூட அதா னியை கைது செய்ய மோடி அரசு தயார் இல்லை. மாறாக, அதானியை பாது காக்க நாடாளுமன்றத்தையே முடக்கிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் சாடினார். மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவ தில் பல்லாயிரம் கோடி லஞ்சம் - ஊழ லில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்த ரவிடவும், இந்த முறைகேடுகளில் ஈடு பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவ டிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி வியாழனன்று (நவ.28) தமிழ்நாடு முழு வதும் மாவட்டத் தலைநகரங்கள் - ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக தென் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாப் பேட்டை, ஆலந்தூர், தி.நகர் பகுதிக் குழுக்கள், போக்குவரத்து, மின்னரங்க இடைக்குழுக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பி னர் பெ. சண்முகம் பங்கேற்று கண்டன உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு:
அதானியைப் பாதுகாக்கும் மோடி அரசு
நாடாளுமன்றத்தில் அதானி முறை கேட்டை எழுப்பினால், விவாதிக்க மறுத்து தினசரி அவையை ஒத்தி வைக்கின்றனர். ஹிண்டன்பர்க் அறிக்கை வந்தபோது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர், அதானி பெயரை குறிப்பிட்டதற்காக நீக்கம் செய்யப்பட்டார். அந்தளவுக்கு அதானியை மோடி தலைமையிலான பாஜக அரசு பாது காத்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர்; அதானியின் 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்ச முறைகேட்டில் தமிழ்நாடு அதிகாரிகளும் சம் பந்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்தி ரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறை கேடுகளுக்காக அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடு திரட்டியபோது அதானி நிறுவனத்தோடும் ஒப்பந்தம் செய்ததாக அரசு தரப்பில் கூறப் பட்டது. இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து விபரங்கள் வெளியிட வேண்டும். அதானி முறைகேட்டில் பல மாநில அதி காரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். பல நாடுக ளும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே, இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோருகிறோம். ஊழலை உலகமயமாக்கிய அதானி அதானி ஊழலை உலகமயமாக்கி உள்ளார். இதனால் அதானி பல்வேறு நாடுக ளில் செய்துள்ள முறைகேடுகள் குறித்து இனி வெளியே வரும். அதானியின் ‘பொற்காலம்’ முடிந்து அஸ்தமன காலம் தொடங்கி விட்டது. நாடாளுமன்றமே நடக்காவிட்டா லும், அதானி பெயரைக் கூறக்கூடாது என்கிறார்கள். அதானியை பாதுகாக்க பிரதமர் மோடி அனைத்து இழிவான நடவ டிக்கைகளையும் எடுத்து வருகிறார். எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் இது போன்று தவறு செய்தால் அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் சுற்றி வளைக்கின்றன. அதானி என்றவுடன் அமலாக்கத்துறை அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. சிபிஐ, பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்துத் துறை களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் கிளர்ந்தெழுவதின் மூலமே மோடியின் மவுனத்தை கலைக்க முடியும். அதானியை கைது செய்ய வைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். சைதாப்பேட்டை பகுதிக்குழு உறுப்பி னர் ஒய். இஸ்மாயில் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். வெள்ளைச் சாமி, பகுதிச் செயலாளர்கள் ஜி. வெங்க டேசன் (சைதாப்பேட்டை), எம். குமார் (தி.நகர்), மாவட்டக்குழு உறுப்பினர் ஹெலன் தேவகிருபை, போக்குவரத்து அரங்க இடைக்குழுச் செயலாளர் விஜயகுமார், ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பினர் ந. வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர்.