புதுதில்லி, நவ.28- அதானியின் ஊழல் விவகாரத்தை விவாதிக்க முடியாது என்று மோடி அரசு பிடிவாதமாக இருப்பதால், நாடாளுமன்றத்தின் இரண்டு அவை களும் மூன்றாவது நாளாக முழுமை யாக முடங்கின. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 25 அன்று துவங்கியது. இந்நிலையில், மூன்றா வது நாளாக வழக்கம்போல நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் வியாழ னன்று காலை 11 மணிக்கு கூடின. பிரியங்கா காந்தி பதவியேற்பு மக்களவையில் முதல் நடவ டிக்கையாக, புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், இடைத்தேர்தலில் வயநாடு தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற பிரியங்கா காந்தி, நான்டெட் தொகு தியில் வெற்றிபெற்ற ரவீந்திர வசந்த ராவ் சவான் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, அதானியின் லஞ்சம், மணிப் பூர், சம்பல் வன்முறை குறித்து விவா திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இரு அவைகளும் ஒத்திவைப்பு
குறிப்பாக, அதானி மீது அமெ ரிக்காவில் பிடிவாரண்ட் பிறப்பிக் கப்பட்டுள்ள நிலையில், இந்த விவ காரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அது தொடர்பான முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் எழுந்த கூச்சல் குழப்பம் காரணமாக 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநிலங்களவையி லும், பிற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு, விதி 267-ன் கீழ் அதானி விவ காரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட 16 பேர் நோட் டீஸ் அளித்திருந்தனர். ஆனால், மாநி லங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்த நிலையில், அங்கும் அமளி ஏற்பட்டு அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. வக்பு மசோதா: ஜேபிசி அவகாசம் நீட்டிப்பு இதனிடையே, 12 மணிக்கு மக்க ளவை மீண்டும் கூடியது. அப்போது கடும் அமளிக்கு இடையே, வக்பு மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு நாள் வரை, நீட்டிக்கக் கோரி கூட்டுக் குழு வின் தலைவர் ஜெகதாம்பிகா பால் விடுத்த கோரிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. எனினும் அதானி விவகாரத்தை விவா திக்க சபாநாயகர் அனுமதி மறுத்த தால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி னர். இதனால், மக்களவை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையும் நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது.