districts

திருச்சி முக்கிய செய்திகள்

வாக்கு சேகரிப்பு முகாம் 

இராஜபாளையம், நவ.28- தெற்கு ரயில்வே அங்கீகார தேர்தல் நடைபெறுவதை யொட்டி சிஐடியு, டிஆர்இயு சங்கங்கள் இணைந்து வாக்கு  சேகரித்தன. வியாழனன்று தென்காசி மாவட்டம் சென்னிகுளம் ரயில்வே கேட், பந்தபுளி, விருதுநகர் மாவட்டம் சோழபுரம்,  நல்லமநாயக்கம்பட்டி, ராமலிங்காபுரம், தொட்டியபட்டி  ரயில்வே கேட் சென்று வாக்கு சேகரித்து இராஜபாளை யம் ரயில் நிலையம் முன்பு நிறைவடைந்தது. வாக்கு சேகரிப்பில் சிஐடியு மாவட்ட துணை தலைவர்  ஜி.கணேசன், இராஜபாளையம் டாக்சி சங்க செயலாளர்  கே.கண்ணன், தலைவர் ஜே.விஜயகுமார், கட்டுமான சங்கத்தினர் வி.மாரியப்பன், ஆர்.முனியாண்டி, பஞ்  சாலை சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வி.செந்தில் வேல், சி.மாரியப்பன், சிபிஎம் எஸ்.உலகநாதன், டிஆர்இயு  ஜெயராம், சிவகுமார், நாகராஜ், கல்யாணசுந்தரம், விக்னேஷ், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு- ஆட்டோ சங்க  தகவல் பலகை திறப்பு விழா

திருச்சுழி, நவ.28- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியில் சிஐடியு-ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தகவல் பலகை திறப்பு விழா நடைபெற்றது. கிளைத் தலைவர் தர்மர் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் செந்தில், பொருளாளர் வேல்முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தகவல் பலகையை ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டி யன் திறந்து வைத்தார். ஆட்டோ தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சிறப்புரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு  உறுப்பினர் செல்வராஜ், சிஐடியு கன்வீனர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

நகர்மன்ற தலைவர் பேருந்து நிலையத்தில் கள ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.28- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நகர் அண்ணா பேருந்து  நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தையும் (கிழக்கு பக்கம்) அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில்  நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்  கண்ணன் தலைமையில் தற்காலிக கடை அமைப்ப தற்கான கள ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி  துணை பொறியாளர் நாகராஜன், நகர் நில அமைப்பு  அலுவலர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

கடையடைப்பு அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.28-  அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிக பயன்பாட்டிற்குரிய வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கடையடைப்பு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து வியாபாரி சங்கம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள  ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஸ்ரீவில்லி புத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி ஆகியவை முழு ஆதரவை தெரிவித்துள்ளன.

இரு சக்கர வாகனம் மாயம்

அருப்புக்கோட்டை, நவ.28- அருப்புக்கோட்டையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றார். அருப்புக்கோட்டை போஸ்டல் காலனியைச் சேர்ந்த வர் ஜெயக்குமார்(48). இவர் வழக்கம் போல தனது இரு  சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். திரும்ப  வந்து பார்த்த போது அதை காணவில்லை. இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர், நவ.28- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிறுமிக்கு பாலி யல் வன்புணர்வு கொடுத்தவருக்கு மாவட்ட மகிளா நீதி மன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தர விட்டது. சிவகாசி அருகே உள்ளது விஸ்வநத்தம். இங்குள்ள ஜெய்சிங் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (59). இவர் அதே  பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் முருகேசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள விரைவு  மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதி முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை  மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி னார்.

கஞ்சா விற்றவர் கைது

சிவகாசி, நவ.28- திருத்தங்கல் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். வடமலாபுரம் அரசு பள்ளி யின் பின்னால் சென்ற போது கோவிந்தநல்லூரைச் சேர்ந்த  முத்துக்குமார்(23) என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து சிறையில்  அடைத்தனர். 

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, நவ.28- சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஸா அஜித் தலைமையில் சனி யன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரி வித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்  பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரம் முழுமையாக உறுதி செய்த பின்பே திறக்க வேண்டும்

ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு நவாஸ்கனி எம்பி கடிதம்

இராமநாதபுரம், நவ.28- பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரம்  குறைவாக இருப்பதாக இந்திய ரயில் வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி  ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலை யில், பாம்பன் ரயில் பாலத்தின் தரத்தை முழு மையாக உறுதி செய்த பின்னரே திறந்திட வேண்டும் என இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி எம்பி ஒன்றிய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிக்கு கடிதம் எழுதி யுள்ளார்.  இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடி தத்தில் குறிப்பிட்டிருந்ததாவது: இராமநாதபுரம் மாவட்டம் பாம்ப னில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம் பாலத்தில் கடல் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முழுமையான நடவடிக்கை இல்லை எனவும், தூண்களில் தற்போதே அரிப்பு தொடங்கியுள்ளதாகவும், புதிய பாலத்தில் சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில்  அதிக ஒலி ஏற்படுவதாகவும், புதிய பாலத்  தில் உள்ள குறைகளை மறு ஆய்வு செய்து  சரி செய்திட வேண்டும் எனவும் இந்திய  ரயில்வேக்கு தெற்கு ரயில்வே அதிகாரி  சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள் ளார்.  பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலை யில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ரயில்வே அதிகாரியே இது போன்ற அச்சமிகு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.  எனவே பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்  னரே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  பாலத்தின் தரத்தை மறு ஆய்வு செய்து  குறைகளை நிவர்த்தி செய்து விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை: 5ஆண்டு சிறை

தேனி, நவ.28- பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த காமாட்சி (75) என்ற முதியவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமி யின் தாய் ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் புகார்  கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை  அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடை பெற்று வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை இந்த வழக்கு விசா ரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் சிறுமி யை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக காமாட்சி  என்ற 75 வயது முதியவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5  ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராத மும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு  சிறை தண்டனையும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதி பதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளி காமாட்சியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாது காப்புடன் அழைத்துச் சென்றனர்.

இதயநிலவன் கதை வசனத்தில் பரமன் திரைப்படம்  நவ.29 இல் வெளியாகிறது

தேனி, நவ.28- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் இதயநிலவன் கதை  வசனத்தில் உருவாகியுள்ள பரமன் திரைப்படம் நவ.29 இல் வெளியாகிறது. இன்ஃபினிட் பிக்சர்ஸ் தயாரிப்பில் பரமன் திரைப்  படத்தை ஜே.சபரீஸ் இயக்கியுள்ளார். சூப்பர் குட் சுப்பிர மணி, பழ.கருப்பையா, வையாபுரி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் நவம்பர் 29 தமிழக மற்றும் கேரள திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாரதிராஜா,  பாக்கியராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, எஸ்.ஏ.சந்திர சேகர், சீமான், சீனுராமசாமி, பேரரசு உள்ளிட்ட பலர்  வெளியிட்டனர். இப்படத்திற்கு தமுஎகச தேனி மாவட்டத்  தலைவர் இதயநிலவன் கதை, திரைக்கதை, வசனம், எழுத, தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார். இப்படம் விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

அதிக அளவு பாரம் ஏற்றிய வாகனங்களுக்கு அபராதம்

தென்காசி, நவ.28- கனரக வாகனங்களில் கூடுதலாக உள்ள சக்கரங்க ளை சாலைகளில் இயக்காமல் அதிக அளவு கனிம வளங்கள் ஏற்றிசெல்லும் வாகனங்களுக்கு புதனன்று தென்காசி ஆர்டிஓ கண்ணன், ஆய்வாளர் மணிபாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இதில் 4 வாகனங்களுக்கு ரூ1 லட்சத்து 94 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

குழந்தைத் தொழிலாளர்களாக பணிபுரிந்த எட்டு சிறுவர்கள் மீட்பு

திருப்பூர், நவ.28 - திருப்பூர் நகரில் பனியன் கம்பெனி ஒன்றில் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்து வந்த 8 சிறுவர்கள் மீட் கப்பட்டனர். திருப்பூர் குழந்தைகள் உதவி மையத்திற்கு திங்களன்று ஓர் அழைப்பு  வந்தது. அதில் திருப்பூர், குமார் நகர் பகு தியில் செயல்பட்டு வரும் தனியார் பனி யன் கம்பெனி ஒன்றில் குழந்தை தொழி லாளர்கள் பணி புரிவதாக தகவல் பெறப் பட்டது. இந்த தகவலின் படி, குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அந்த கம் பெனிக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டதில் சிறுவர்கள் அங்கு பணிபுரி வது உறுதி செய்யப்பட்டது. இதைய டுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் ரியாஸ் அகமது பாஷா அறிவு றுத்தலின்படி, செவ்வாயன்று, தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை  இயக்குனர் சந்தோஷ், குழந்தைகள்  உதவி மைய ஆற்றுப்படுத்துநர் வரதராஜ் மற்றும் 15.வேலம்பாளையம் காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் திருப்பூர், குமார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் சங்கீத்குமார் ஜெயின் என்பவரது பனியன் கம்பெனி யில் குழந்தை தொழிலாளர் மீட்பு ஆய்வு  மேற்கொண்டனர். இந்த ஆய்வில் குழந்தை தொழிலாளர்களாக பணி  புரிந்த எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் நலக்கு ழுவின் உத்தரவின் பேரில் சிறுவர்கள் 15. வேலம்பாளையம் பகுதியில் செயல் பட்டு வரும் டிஸ்சோ குழந்தைகள் பராம ரிப்பு நிறுவனத்தில் தற்காலிக அடைக்க லத்திற்காக ஒப்படைக்கப்பட்டனர்.  சிறுவர்களின் பெற்றோர் வந்த பின் னர், சிறுவர்களை அவரது பெற்றோரி டம் குழந்தைகள் நலக்குழு மூலம் ஒப்ப டைக்க உள்ளனர்.  மேலும் குழந்தைகளை பணிக்கு  அமர்த்திய கம்பெனி உரிமையாளர் மீது  தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் மூலம் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற குழந்தை தொழிலா ளர்கள் யாரேனும் பணிபுரிந்தால் குழந் தைகள் உதவி எண் : 10 9 8 என்ற இலவச  தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரி விக்கலாம் என்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அக மது பாஷா கூறியுள்ளார்.