districts

img

ஒன்றிய மோடி அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கை இராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

 இராமநாதபுரம், நவ.28- ஒன்றிய மோடி அரசின்  ஜனநாயக விரோத, மக்கள்  விரோத, தொழிலாளர்கள் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்து இராமநாதபுரத்தில் அனை த்து தொழிற்சங்கங்கள் மற் றும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்  கம், மாதர், மாணவர், வாலி பர் சங்கங்கள் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடி யுசி மாவட்டத் தலைவர் என். கே.ராஜன் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலை வர் எம்.முத்துராமு, கே.ஜீவா னந்தம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆர்ப்பா ட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, எல்பிஎப் டாஸ்மாக் மாவட்ட  நிர்வாகி எம்.எஸ்.ராஜா, ஏஐ டியுசி சார்பில் என்.எஸ்.பெரு மாள், தர்மராஜ் ஆகியோ ரும், சிஐடியு சார்பில் மாவட்  டத் தலைவர் எஸ்.ஏ.சந்தா னம், விவசாயிகள் சங்கம் சார்பில் வி.மயில்வாகனன், ஆர்.கருணாநிதி, விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்  கே.கணேசன், ஆர்.சேது ராமு, ஜெயசீலன் ஆகியோர்  பேசினர்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், 44  தொழிலாளர் நலச் சட்டங் களை 4 தொகுப்புகளாக மாற்றக்கூடாது, 100 நாள் வேலையை 200 நாள் ஆக்கி, ஒரு நாள் சம்பளத்தை  600 ஆக்க வேண்டும்; விவ சாயிகள் உற்பத்தி பொரு ளுக்கு, எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைத்த அடிப் படையில் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.