districts

அதானியை கைது செய்யக் கோரி சிவகாசி, இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, நவ. 28- சூரிய மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தங்களுக்காக ரூ.2,029 கோடி  லஞ்சம் கொடுத்த அதானி மீது உரிய  விசாரணை மேற்கொள்ள வேண் டும். எல்ஐ நிறுவனத்திற்கு ரூ.12,000  கோடி இழப்பு ஏற்படுத்திய அதா னியை கைது செய்ய வேண்டும். அதானிக்கு ஒன்றிய மோடி அரசு  துணை போகக் கூடாது. தமிழ்நாடு  அரசு - அதானி நிறுவனத்திடம் சூரிய  மின்சாரம் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து  செய்ய வேண்டும். அதானியின் சூரிய மின் உற்பத்திக்கு துணை யாக உள்ள மின்வாரிய அதிகாரி கள் மீது உரிய விசாரணை நடத்திட  வேண்டும் என்று வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்  டம் வியாழனன்று நடைபெற்றது. சிவகாசியில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இப்  போராட்டத்திற்கு மாநகரச் செயலா ளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை யேற்றார். துவக்கி வைத்து மாநி லக்குழு உறுப்பினர் எம்.மகா லட்சுமி பேசினார். முடிவில் மாவட்ட  செயலாளர் கே.அர்ஜூனன் கண் டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.குருசாமி, எம்.சுந்தரபாண்டி யன், கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.திருமலை, எஸ்.சரோஜா, வி.ஜெயக்குமார், எஸ்.வி.சசிக்குமார், வெம்பக் கோட்டை ஒன்றியச் செயலாளர் கே. கண்ணன் ஆகியோர் உட்பட பலர்  பங்கேற்றனர். இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குரு வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்தப் போராட்டத்  தில் மாவட்டச் செயலாளர் வி.காசி நாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் நா.கலையரசன், எம்.சிவாஜி, எம்.முத்துராமு, எம்.ராஜ்குமார், வி.மயில்வாகணன், கே.கருணாகரன், தாலுகாச் செய லாளர்கள் கணேசன், அம்ஜத்  கான், முருகேசன், தட்சிணா மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் முருகன், செல்வராஜ், கல்யாணசுந்தரம், சிஐடியு அய்யா துரை, சந்தானம், பாஸ்கரன், மலை ராஜ், விதெச  சேதுராமு, எஸ்எப்ஐ  வைஷ்ணவி, மாதர் சங்கம் சுமதி, வெங்கடேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.