states

img

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்

ராஞ்சி, நவ.28- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-ஆவது முறையாக ஹேமந்த் சோரன் (49)முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலை மையிலான ‘இந்தியா’ கூட் டணி மொத்தமுள்ள 81 இடங்  களில் 56 இடங்களை (ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16,  ஆர்ஜேடி 4, சிபிஐ-எம்எல் 2)  கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, வியாழக்  கிழமை பிற்பகல் தலைநகர்  ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வாா் பதவிப்பிரமாணமும், ரகசி யக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் ஜேஎம்எம் கட்சியின் தேசி யத் தலைவர் சிபு சோரன், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பான ர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்  சாப் முதல்வர் பகவந்த் மான்,  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவ குமார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், ராஷ்ட் ரிய ஜனதாதளம் தலைவர்  தேஜஸ்வி உள்ளிட்ட முக்கிய  தலைவர்கள் கலந்து கொண்  டனர்.