tamilnadu

img

பாதுகாப்பு விதிகளை மீறி திட்டத்தை நிறைவேற்றியதன் பின்னணி என்ன?

மக்கள் உயிருக்கு யார் பொறுப்பு? 
சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

புதுதில்லி, நவ.28- இராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில்பாலம் பாதுகாப்பு விதி களை மீறி கட்டப்பட்டிருப்பதாக ரயில்வே  பாதுகாப்பு ஆணையரே குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், இந்தத் திட் டத்திற்கு ஒப்புதல் அளித்தது யார்? மக்க ளின் உயிருக்கு யார் பொறுப்பு? என்று  சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பி யுள்ளார். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான  ஆர்டிஎஸ்ஓ (RDSO)-வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறை வேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக சு. வெங்கடேசன் எம்.பி. மேலும் கூறியிருப்பதாவது: பாம்பன் பாலம் 1914 இல் கட்டப் பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு  பொறியியல் அதிசயமாகும். அதற்குப் பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக் கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்.  உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயின் ஆராய்ச்சி வடிவம் மற்றும்  தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்த விதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு  வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில்வே வாரி யத்தின் ஆதரவோடு ஆர்டிஎஸ்ஓ தன் கட மையை கைவிட்டுள்ளது வேதனையா கும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.  

இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட  தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்  கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில் நுட்பக் குழுவை அமைக்க வில்லை. ரயில்வே வாரியம் தனது சொந்த நடை முறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்  தானது துரதிஷ்டமானது என்று ஆணை யர் கண்டித்துள்ளார்.  அது மட்டுமல்ல பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர்டிஎஸ்ஓ-வை  கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள் ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்  லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை- ஆணையம் சுட்டிக் காட்டிய பின்- 18.10.24இல் பெற்றுள்ளனர்.  இந்தியாவின் பெருமைமிகு அமைப்  பான இந்திய ரயில்வே வாரியம் தமிழ கத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில்  பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதி களை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத் திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயி லின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகை யில் கட்டப்பட வேண்டிய கட்டுமானத்  தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப் படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்  தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்  கான மக்களின் உயிரை அலட்சியப் படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என் பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.