வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கேரள மாநிலம் வயநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதி களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரே ஒரு தொகுதி யில் மட்டுமே உறுப்பி னராக இருக்க வேண் டும் என்ற விதிகளின் படி வயநாடு எம்.பி., பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் நவம்பர் 20 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில், இன்று பிரியங்கா காந்தி, அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.