லஞ்ச, ஊழலில் ஈடுபட்டுள்ள அதானியை கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கையும் களவுமாக சிக்கியுள்ள அதானியை உடனடியாக கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நவ.28 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுத்திருந்தது.
அதானியை கைது செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், மாவட்டகுழு உறுப்பினர் கனகராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் மனோகரன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுதா உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.