india

img

கடந்தாண்டைக் காட்டிலும் 40 சதவிகிதம் அதிகம் ரூ. 2 ஆயிரத்து 683 கோடி லாபம் ஈட்டிய கெயில் இந்தியா நிறுவனம்!

புதுதில்லி, ஜூன் 15 - ‘கெயில் இந்தியா’ நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் ரூ. 2 ஆயிரத்து 683 கோடியே 11 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.  இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும்  ஒன்றிய அரசுக்கு சொந்தமான ‘கெயில் இந்தியா’ நிறு வனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.  அதன்படி, ‘கெயில் இந்தியா’ நிறுவனம் 2022 மார்ச் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நிகர லாபமாக ரூ. 2 ஆயிரத்து 683 கோடியே 11 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது 2021 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 40 சதவிகிதம் அதிகமாகும்.  2021 மார்ச் காலாண்டில் ‘கெயில் இந்தியா’ நிறுவனம் நிகர லாபமாக ரூ. ஆயிரத்து 907 கோடியே 67 லட்சத்தை மட்டுமே ஈட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. 2022 மார்ச் காலாண்டில் ‘கெயில் இந்தியா’ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ. 26 ஆயிரத்து 968 கோடியே 21 லட்சமாக உள்ளது.  இதுசென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2021 மார்ச் காலாண்டில் ‘கெயில் இந்தியா’ நிறுவனத்தின் செயல்பாட்டு வாயி லான வருவாய் ரூ. 15 ஆயிரத்து 549 கோடியே 07 லட்சமாக மட்டுமே  இருந்தது. மேலும், 2022 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டில் ‘கெயில் இந்தியா’ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு  ரூ. 10 ஆயிரத்து 363 கோடியே 97 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இந்துஸ்தான் காப்பர் லாபம் ரூ. 89 கோடி லாபம்!
இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் 2022 மார்ச்  காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ. 88 கோடியே 99 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ரூ. 36 கோடியே 81 லட்சம் நிகர நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது. தற்போது லாபத்தை பெற்றுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் காப்பர்  நிறுவனத்தின் வருவாய் ரூ. 531 கோடியே 55 லட்ச மாக இருந்தது. இது 2022 மார்ச் காலாண்டில் ரூ. 561 கோடியே 47 லட்சமாக உயர்ந்துள்ளது. 2021-22 முழு நிதியாண்டில் இந்துஸ்தான் காப்பர்  நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக  ரூ. 373 கோடியே 83 லட்சத்தையும், வருவாயாக ரூ. ஆயிரத்து 872 கோடியே 18 கோடியையும் ஈட்டியுள்ளது.