india

img

மருந்துகள் பரிசோதனை : 39 மருந்துகள் தரமற்றவை

மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நடத்தப்பட்ட தர சோதனைகளில் 39 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. போலி மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் . 

நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் . அதன்படி , கடந்த ஜூன் மாதம் 681 மருந்துகள் தரப்பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 642 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் , ரத்த அழுத்தம் , இதய பாதிப்பு , காய்ச்சல் , தொண்டை அலர்ஜி பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 39 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது . கைகளை கழுவும் கிருமி நாசினி சிலவற்றும் தரமற்றதாய் இருந்ததாகவும் ஆய்வில் தெரிவித்திருந்தனர் . இதை பற்றிய மேலும் விவரங்களை மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் இணையத்தில் வெளியிட்டுள்ளது . 39 போலி மருந்துகளை தயாரித்த நிறுவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்