மத்தியப்பிரதேசத்தில் பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி லோகேஷ் என்பவர், கடந்த 4ஆம் தேதி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லோகேஷை கைது செய்தனர். லோகேஷிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை மது அருந்த செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. உஜ்ஜைனில் பரபரப்பான சாலை நடைபாதையில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. மேலும் இதை தடுக்கமால் அதை பார்த்த மக்கள் பலர், அதை வீடியோ எடுத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.