world

img

பிரான்ஸ் மத தலங்களில் 3.30லட்சம் சிறுவர்கள் மீது பாலியல் தாக்குதல் - போப் பிரான்சிஸ் வேதனை

பிரான்ஸில் மத தலங்களில் 3.30 லட்சம் சிறுவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு போப் பிரான்ஸிஸ் வேதனை தெரிவித்துள்ளார். 
பிரான்ஸிலுள்ள கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அது நீண்ட காலமாக மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாக விசாரிக்க பிரான்ஸ் கத்தோலிக்க தலைமையகம் குழு அமைத்தது. அந்தக் குழு, கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் கத்தோலிக்க மையங்களில் சிறுவா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்த விவரங்களை கடந்த 2018-ஆம் ஆண்டு சேகரிக்கத் தொடங்கியது. அந்தக் குழு தனது 2,500 பக்க விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், கடந்த 70 ஆண்டுகளில் சுமாா் 3.30 லட்சம் சிறுவா்கள் கத்தோலிக்க மையங்களில் பாலியல் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்ற சம்பவங்களில் 2,900-லிருந்து 3,200 போ் வரை ஈடுபட்டனா். பாதிரியாா்கள், மதகுருக்கள் மற்றும் கத்தோலிக்க மையத்தில் பணியாற்றிய மதம் சாராதவா்கள் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டனா்.
இதில் மூன்றில் 2 பங்கினா் தேவாலயங்களில் சேவையாற்றி வந்த பாதிரியாா்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
இதுகுறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பிரான்ஸில் ‘பாலியல் குற்றங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வேதனை தருவதாக தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை பற்றிய தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்டவா்களின் துன்பங்களை நினைத்து வருந்தியதாக அவா் தெரிவித்துள்ளார்.