ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நலமாக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் அசிடிட்டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.