கொல்கத்தா:
நீதித்துறையை தவறாக சித்தரிப்பதாக கூறி,மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொல கத்தா உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 213 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தாலும், கட்சித் தலைவர் மம்தா, நந்திகிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுவேந்துஅதிகாரியிடம் 1,956 வாக்கு களில் தோல்வியை அடைந்தார்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மம்தா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதேநேரம், இந்த வழக்கை கொல்கத்தா தலைமை நீதிபதி கவுசிக் சந்தா விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு தனியாக கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தார். ‘‘கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால், வழக்கு விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கும்’’ என்று கடிதத்தில் அவர்காரணம் கூறியிருந்தார். எனினும் உச்ச நீதிமன்றம் இந்த கடிதத்தில் மீது எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
இதனிடையே, மம்தா தொடர்ந்த வழக்கு நீதிபதி கவுசிக் சந்தா முன்பே விசாரணைக்கு வந்தது. அப்போது, மம்தா பானர்ஜிக்குஅவர் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார். நீதித்துறையை தவறாக சித்தரிப்பதற்காக இந்த அபராதம் விதிப்பதாகவும், கொரோனாவால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும் பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் நீதிபதி கவுசிக் சந்தா அறிவித்தார்.