பெங்களூரு:
பாஜக எம்எல்ஏவின் மகன், ஆப்பிள்ஐபோன் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் கர்நாடகமாநிலத்தில் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் கனககிரி தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் பசவராஜ் தாதேசுகுர். இவரது இளையமகன் சுரேஷ். இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது. அதனை தனது நண்பர்களோடு ஜாலியாகக் கொண்டாட முடிவு செய்த சுரேஷ்,பிஎம்டபிள்யூ 520டி வகை சொகுசுக்காரில் நண்பர்களை அழைத்துக் கொண்டு, கனககிரி, காரடகி போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளார். பின்னர்ஹோசபேட் என்ற பகுதிக்கு அருகேயுள்ள ஒரு இடத்தில் நண்பர்களுடன்சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியுள் ளார். அப்போது ‘ஹேப்பி பர்த்டேசுரேஷ்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு கேக்காக வடிவமைக்கப்பட்டு, நீண்ட டேபிளில் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக வெட்டப் படும் கேக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இதில், விஷேசம் என்னவென் றால், வைக்கப்பட்ட அத்தனை கேக்குகளையும், சுரேஷ் கத்தியைப் பயன்படுத்தி வெட்டாமல், தனது லேட்டஸ்ட் மாடல் ஐபோனை பயன்படுத்தி வெட்டியுள்ளார். அத்தனை கேக்குகள் மீதும்வரிசையாக கோடு போட்டதை போலவெட்டியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங் களில் வெளியான நிலையில், சுரேஷின் ஆடம்பரம், டாம்பீகத்தைப் பார்த்து பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொரோனா வேலையிழப்புகளால், மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் நேரத்தில், பாஜக எம்எல்ஏமகன் சுரேஷ், சில பேருக்காக ஏராளமான கேக்குகளை வெட்டி வீணடித்ததுமட்டுமன்றி, அவற்றை ஐபோனால் வெட்டியது பணத்திமிரைக் காட்டுவதாக உள்ளது என்று விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் சுரேஷ் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஆனால், பாஜக எம்எல்ஏ பசவராஜ் தாதேசுகுர், தனது மகனின் செயலைநியாயப்படுத்தியுள்ளார். கத்திக்குப்பதில் போனைப் பயன்படுத்தியுள்ளார். கொரோனா அபாயம் இருக்கும் நேரத்தில் ஐபோன்தான் பாதுகாப்பு என்று கூறியுள்ளார்.
இதே பசவராஜ் தாதேசுகுர், தேர்தலுக்கு முன்பு தன்னிடம் பணம் இல்லைஎன சோகமாக முகத்தை வைத்து மக்களிடம் பணம் திரட்டி போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 முறைதோற்றதால், கடந்தமுறை பரிதாபப்பட்டு மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், தற்போது விலை உயர்ந்தகார்களை விட்டு அவர் கீழே இறங்குவதே இல்லை என்று தொகுதி மக்கள்புலம்புகின்றனர்.