பெங்களூரு
25 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தின் சட்டமேலவைத் தேர்தல் (எம்எல்சி) முடிவுகள் இன்று வெளியாகியது.
தேர்தல் முடிவில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தது. அதாவது வெறும் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்ததால் ஆளுங்கட்சியான பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்த சில மணிநேரங்களில் எல்லாம் தலைக்கீழாக நிகழ்ந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் 11 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. பாஜக 11 இடங்களில் வெற்றி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடகா எம்எல்சி தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சி தான் ஆதிக்கம் செலுத்தும் என்பது ஒரு வரலாறு. ஆனால் அந்த வரலாறை சுக்குநூறாக நொறுக்கி காங்கிரஸ் வரலாறு படைத்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் 2 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி.எதிர்க்கட்சிகள் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது பாஜக தேசிய தலைமை.