பெங்களூர், ஜன.7
கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில தினங்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
அதைத்தொடர்ந்து, கர்நாடகாவில் கடந்த 1ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு சில தினங்களிலே இதுவரை 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளிகள் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.