பெங்களூரு:
பொதுவாக இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு மட்டுமே போராடும் மாநிலமாக இருந்து வந்தது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தபின், தமிழ்நாடு தாண்டி, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களும் கூட இந்தித் திணிப்புக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு மெட்ரோ நிலையத்தில் ஹிந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டபோது, ஹிந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்து கன்னட அமைப்புக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர்.
அப்படியும் மோடி அரசு திருந்துவதாக இல்லை என்பதையே தற்போதைய நிகழ்வுகள் காட்டியுள் ளன. அதாவது, ஹிந்தித் திணிப்பின் அடுத்தகட்டமாக கர்நாடக மாநிலவங்கிச் சேவைகளிலும் தற்போதுகன்னடத்தைப் புறக்கணித்து விட்டு, ஹிந்தி திணிக்கப்பட்டுள்ளது. கர்நாடக வங்கிகளின் ஏடிஎம் மெஷின் கள், டெபாசிட் ஸ்லிப்புகள், பணம் பெறக்கூடிய சலான்கள், கால் சென்டர்கள் உள்ளிட்டவற்றில் கன்னடம்முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.இது கன்னடர்கள் மத்தியில் புதியகொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி போன்ற அந்நிய மொழியை ஏன் எங்களிடம் தள்ளுகிறீர்கள்... மைசூரைச் சேர்ந்தவர் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், ஹிந்தியில் விவரம் தேட வேண்டிய நிலையில் இருப்பது எவ்வளவு அவலமானது.. இப்படி எல்லா துறைகளிலும் ஆக்டோபஸ் போல ஹிந்திதனது கரங்களை விரித்தபடி வருவதைப் பார்த்தால், விரைவில் கர்நாடகத்திலேயே கன்னடர்களை அந்நியர்களாக்கி விடுவீர்களோ? என்றஅச்சம் வருகிறது என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தில்லியில்கன்னட மொழியிலான எழுத்துக் களை இடம் பெறச் செய்ய முடியுமா?அங்கு மட்டும் 2 மொழிகள்.. கர்நாடகாவில் மட்டும் ஏன் இந்தியோடு சேர்த்து 3 மொழிகள்..? என்றும் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.‘வங்கிச் சேவைகளை எங்கள் மொழியில் வழங்குங்கள்’ (#ServeInMyLanguage) என்ற ஹேஷ்டேக் ஒன்றையும், சமூக வலைத்தளங்களில் கன்னடர்கள் வைரலாக்கி வருகின்றனர்.