பெங்களூரு:
பொய்யை உற்பத்தி செய்யும்தொழிற்சாலைகளை அமைத்ததுதான் மோடி அரசின் சாதனை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூருவில் திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் அவர் கூறியிருந்ததாவது:பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்று பார்த்தால் பூஜ்ஜியம்தான். நாடுஇருட்டில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.70 ஆண்டு கால உழைப்பால்உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்து விட்டது. அதற்குபதிலாக பொய் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது. பொய் களை உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழிற்சாலையாக பாஜக இருக்கிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் நாடு வேகமாக பின் னோக்கி செல்கிறது.
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி,பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, வேளாண் சட்டங்கள்போன்ற மத்திய பாஜக அரசின்7 பெரிய பேரழிவுத் திட்டங்களால் நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வேலையின்மையும், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் திவாலாகி வருகின்றன. மாநிலங்கள் திவாலானால், நாடும் திவலானதாக அர்த்தம். சாமானிய குடும்பங் கள் கடந்த 2019-ஆம் ஆண்டு மாதம் ரூ. 5 ஆயிரத்தில் குடும் பத்தை நடத்தின. ஆனால் இன்றுஅது ரூ. 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மக்களின் உழைப்பால் கிடைக்கும் பலன், அம்பானி,அதானிக்கு செல்கிறது.இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.