இந்தியாவில் மேலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று பல நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதனடிப்படையில், கர்நாடகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சர்வதேச நாடுகளில் இருந்து திரும்புபவர்ளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஜிம்பாய்வேயில் இருந்து நாடு திரும்பிய குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குஜராத் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.