india

img

ஹரியானா முதல்வரை பதோலிக்குள் விட மாட்டோம்... ராகேஷ் திகாயத் அறிவிப்பு...

புதுதில்லி:
‘அம்பேத்கர் சிலை திறப்பு விழா என்ற பெயரில் வரும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை, பதோலி கிராமத்திற்குள் விடமாட்டோம்’ என்று பாரதியகிஷான் யூனியன் தலைவர்ராகேஷ் திகாயத் அறிவித் துள்ளார்.

அம்பேத்கர் சிலையை, கட்டாரைத் தவிர மற்றவர்கள் யார் திறந்தாலும் அதைத் தாங்கள் வரவேற்பதாகவும் திகாயத் தெரிவித்துள்ளார்.புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய 3 நுழைவாயில் களை முற்றுகையிட்டு, 137 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதுதவிர உ.பி., பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு அவர்கள்போராடிக் கொண்டிருக்கின் றனர்.இந்நிலையில், டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலையை,ஏப்ரல் 14 அன்று ஹரியானா மாநிலம் பதோலி கிராமத்தில் முதல்வர் மனோகர் லால்கட்டார் திறந்து வைப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக கட்டார் பதோலி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக முதல்வர்கட்டாரின் இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகேஷ் திகாயத், ‘பதோலி கிராமத்திற்குள் நுழைய முதல்வர் கட்டாரை சம்யுக்தாகிசான் மோர்ச்சா விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல, முதல்வர் கட்டாருக்கு எதிரானவர்கள். முதல்வர் கட்டார் வருவதே விவசாயிகள் மத்தியில் உள்ளஒற்றுமையை சீர்குலைக்கத் தான். அவருக்கு பதிலாக யார்வேண்டுமானாலும் சிலையை திறந்து கொள்ளலாம். அவரை மட்டும் அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள் ளார்.