புதுதில்லி:
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்களன்று தொடங்கியது.முதல்முறையாக 2 வயது முதல் 18 வயதுள்ளபிரிவினருக்கு ஹைதரா பாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து பரிசோதிக்கப்படவுள்ளது. இந்த நிறுவனம் 2 ஆவது கட்டம்மற்றும் 3 ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது.
இந்த பரிசோதனைகள் தில்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்ஐஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. 525 தன்னார்வலர்களுக்கு இந்த சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி சோதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தில்லிஎய்ம்ஸ் மருத்துவமனை யிலும் இந்த சோதனை திங்களன்று தொடங்கியது. இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ள தாவது:
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கெனவே 12-18 வயதுடைய குழந்தைகள் மற்றும்சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட் டது. திங்களன்று முதல்தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 - 6 மற்றும் 6 - 12 வயதுடைய குழந்தை களுக்கு தடுப்பூசி செலுத்திபரிசோதனை தொடங்கப் பட்டுள்ளது.