india

img

பத்திரிகை ஆசிரியர்கள் 6 பேர் மீது தேசத்துரோக வழக்கு.... தில்லி விவசாயிகள் போராட்டச் செய்திகளால் ஆத்திரம்.... பாஜக ஆளும் உ.பி., ம.பி. அரசுகள் அராஜகம்....

புதுதில்லி:
குடியரசு தினத்தன்று தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வெளியிட்டதற்காக, மிருணாள் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத்ஜோஸ், ஜாபர் ஆகா, பரேஷ் நாத்மற்றும் அனந்த் நாத் ஆகிய 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் மீது தேசத் துரோகம், குற்றச் சதி மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உ.பி., ம.பி. மாநிலபாஜக அரசுகளின் இந்த அராஜகத்திற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (The Editors Guild of India) கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின்தலைவர் சீமா முஸ்தபா, பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர் ஆகியோர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ள்ளனர்.உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச ஆட்சியாளர்கள், ஊடகவிய லாளர்கள் மீது குறிவைத்திருப்பதானது, நமது ஜனநாயக குடியரசின் ஒவ்வொரு மதிப்பையும் கடுமையாக மீறுகிறது மற்றும் காலில் போட்டு மிதிக்கிறது.ஊடகங்களை கடுமையாக காயப்படுத்துவதன் மூலம், இந்திய ஜனநாயகத்தின் சுயாதீன கண்காணிப்புக் குழுவாக, ஊடகங்கள் செயல்படுவதைத் தடுப்பதற்கு முயற்சி நடக்கிறது.அரசுகளின் இத்தகைய அச்சுறுத்தும்நடவடிக்கைகளுக்கு பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.

குறிப்பாக, விவசாயிகள் போராட்டத்தின்போது போலீசார் சுட்டதில் நவ்னீத் சிங்என்பவர் மரணம் அடைந்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. களத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்தவுடன் அதனை ஊடகவியலாளர்கள் பகிர்ந்து கொள்வது இயல்பானது.அன்றைய நாளில் இதேபோல போராட்டக் களத்தில் இருந்தும், காவல்துறையினரிடமிருந்தும், நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்தும் பல செய்திகள் வெளிவந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.எனவே, வேண்டுமென்றேதான் இவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதுவும் ஒரே நிகழ்வுக்காக வெவ்வேறு மாநிலங்களில் பதியப்பட்டுள்ளது.இவ்வாறு பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவது ஒரு குடியரசு நாட்டில்உரிமைகளைப் பறிப்பதாகும். சுதந்திரமாகப் பணி புரிவதைத் தடுப்பதாகும். எனவே நாங்கள் உடனடியாக இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்எனக் கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.